அச்சம் வேண்டாம் பயமும் வேண்டாம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அச்சம் வேண்டாம் பயமும் வேண்டாம்

            ஆண்டவர் பணிக்காய் இன்றே புறப்படு

            தூக்கம் வேண்டாம் தயக்கம் வேண்டாம்

            தூயவர் பணிக்காய் துரிதமாய்ப் புறப்படு

 

                        காலம் பொன்னானது மீண்டும் வராதது - 2

                        கிருபையின் வாசல் அடைபட்டுப் போனால்

                        சத்தியம் என்னாவது

                        கிருபையின் வாசல் அடைபட்டுப் போனால்

                        இரட்சிப்பு என்னாவது - அச்சம் வேண்டாம்

 

1.         தேவன் தந்திடும் புதுபெலன் பெற்றிடு

            தேவனுக்காகப் பெரியதைச் செய்ய நினைத்திடு - 2

            விசுவாசம் என்னும் கேடயம் அணிந்து புறப்படு - 2 - காலம் பொன்னானது

 

2.         வல்லவர் உன்னோடிருப்பார் நடத்துவார்

            வழிகளிலெல்லாம் பாதுகாப்பாய் போசிப்பார் - 2

            ஆவியின் பட்டயம் பிடித்திடு இன்றே புறப்படு - காலம் பொன்னானது

 

3.         கண்ணீரோடு வசனங்கள் விதைத்திடு

            கம்பீரமான அறுவடை பெற்றிடு - 2

            எஜமான் கண்டு மகிழ்ந்திடு உள்ளம் பொங்கிடு - 2 - காலம் பொன்னானது

 

 

- J. ஜேக்கப் ஞானதாஸ்

 

 

https://www.youtube.com/watch?v=vlxDdviURCI

Comments