அசைக்கப்படுவதில்லை நான் அசைக்கப்படுவதில்லை கர்த்தரை

நிஜீ.கீதங்கள்:1188

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அசைக்கப்படுவதில்லை நான்

                        அசைக்கப்படுவதில்லை

                        கர்த்தரை என் முன்பாக வைத்துவிட்டேன்

                        நான் அசைக்கப்படுவதில்லை.

 

1.         ஜீவனுள்ள தேவனை பற்றிக்கொண்டேன்

            கறை திறை ஒன்றும் நெருங்காது

            இரட்சகரை என்னோடு அணைத்துக் கொண்டேன்

            சாத்தானின் சேனை என்னை அணுகாது

 

2.         தேவ தூதர் சேனைகள் என்னோடு

            செல்லுகின்ற வல்லமையால் நிரப்பப்பட்டேன்

            பாதங்கள் கல்லின் மேலே இடறாமல்

            கரங்களில் ஏந்தி என்னை நடத்திடுவார்

 

3.         இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டேன்

            ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்

            வாக்குத்தத்த வசனங்கள் பெற்றுக்கொண்டேன்

            நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்

 

 

- Bro. J. Sam Jebadurai

 

 

Comments