அஞ்சு கல்லு கையில அற்புதந்தான் பையில
அஞ்சு
கல்லு கையில அற்புதந்தான் பையில
அதிசயந்தான் நடக்க போகுது
ஜனங்க ஆடிப்பாடி துதிக்கப்
போகுது
அடிச்சானய்யா தாவீது நெத்தியடி
அதில் விழுந்தானய்யா
கோலியாத்து செத்தபடி
ஒரு உருட்டு கல்லுல ஒரு சுருட்டு
கவனுல
முரட்டி அடி விரட்டி அடி நெத்தி
1. எதிரிகளை தோற்கடிக்கும் பட்டயம் - அது
கிதியோனின் கர்த்தருடைய பட்டயம்
கத்தி படை சுத்தி நிற்க வேண்டாமே (2)
ஒரு சட்டி குள்ள தீவட்டி போதுமே (2)
சட்டியத்தான் கீழே தூக்கி போட்டு உடை
தீவட்டிக்குத்தான் பயந்து ஓடும் எதிரி
படை
2. சிம்சோனின் வைராக்கியம் இருந்தால்
நீ சீறிவரும் சிங்கத்தையும் கிழிக்கலாம்
பட்சியின் பட்சணமும் கிடைக்குமே (2)
பலவானின் மதுரமும் கிடைக்குமே (2)
கழுதையின் பச்சை தாடை எலும்பு
எதிரிகளை முறியடிக்கும் இரும்பு
3. சாத்தானை ஓட ஓட விரட்டணும்
அவன் சேனைகளை
ஒரு நொடியில் முறிக்கணும்
சேனைகளின் போர் வீரனாய் நிற்கணும்
ஜெயம் எடுத்த இயேசுவுக்காய் வாழணும்
மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தார்
தோல்வியில்லை இனி என்றும் வெற்றியே
- Pr. Moses Rajasekar
https://www.youtube.com/watch?v=lhqLiYLMON8
https://www.youtube.com/watch?v=aInDr7ln05E
Comments
Post a Comment