அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானைய்யா

நிஜீ.கீதங்கள்:1930

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானைய்யா

                   என் ஆறுதல் நாயகன் நீர்தானைய்யா

 

1.         கருவினில் கண்டவர் நீர்தானைய்யா

            என்னை காலமெல்லாம் சுமப்பவர் நீர்தானைய்யா

            தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்

            தயவாக அணைப்பவர் நீர்தானைய்யா

 

2.         கண்ணீரைத் துடைப்பவர் நீர்தானைய்யா

            என் கவலைகள் தீர்ப்பவர் நீர்தானைய்யா

            பெலவீன நேரம் சோர்ந்திட எனக்கு

            பெலன் தந்து நடத்தியதும் நீர்தானைய்யா

            கிருபையை ஈந்ததும் நீர்தானைய்யா

 

3.         வழியாக வந்தவர் நீர்தானைய்யா

            என்னை ஒளியாக மாற்றியவர் நீர்தானைய்யா

            உலகத்தின் மாயைக்கு மயங்காதபடிக்கு

            மறுரூபமாக்கியவர் நீர்தானைய்யா

            என்னை மகிமையில் சேர்ப்பவர் நீர்தானைய்யா

 

 

Comments