அக்கினியின் காற்றை வீசச் செய்யுமே பின்மாரியின்

நிஜீ.கீதங்கள்:1192

To Download Txt Lyrics file

 

                   அக்கினியின் காற்றை வீச செய்யுமே

                        பின்மாரியின் மழையை பொழியச் செய்யுமே

 

1.         மூப்பர்கள் சொப்பனத்தை காணச் செய்யுமே

            வாலிபர்கள் தரிசனத்தை நோக்கச் செய்யுமே

            எங்கள் குமாரரை எழும்பச் செய்யுமே - 2

            தீர்க்க தரிசனங்களை சொல்லச் செய்யுமே - 2

 

2.         ஆவியின் வல்லமையை ஊற்றச் செய்யுமே

            ஆவியின் கனிகளால் நிறையச் செய்யுமே

            காட்டுப் புறாக்கள் சப்தம் கேட்கச் செய்யுமே - 2

            தேசம் எங்கும் எழுப்புதல் காணச் செய்யுமே - 2

 

3.         இந்தியர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவும்

            கர்த்தாதி கர்த்தரைப் போற்றிப் பாடவும்

            கல்வாரி இரத்தத்தால் மீட்கப் படவும் - 2

            இந்தவேளை இப்போதே சந்தித்தருளும் - 2

Comments