அக்கினி அபிஷேகம் தாருமே

நிஜீ.கீதங்கள்:2167

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

            அக்கினி அபிஷேகம் தாருமே

          உந்தன் ஆவியை ஊற்றுமே

            உம்மை போல மாற்றுமே

            உந்தன் நாமம் சூட்டுமே

                       

                        அல்லேலூயா அல்லேலூயா

                        வல்லமை தேவன் அல்லேலூயா

                        மகத்துவ ராஜன் அல்லேலூயா

                        இப்போ வாரும் இறங்கி வாரும்

 

1.         மோசேயாக என்னை அழையும்

            யோசுவாவாக என்னை மாற்றும்

            காலேபாக எழும்பச் செய்யும்

            இஸ்ரவேலாய் வழி நடத்துமே

            என்னை இன்று நடத்துமே

            உந்தன் ஆவியால் நிரப்புமே

 

2.         அற்புதம் செய்ய பழக்குவித்தீரே

            உந்தன் தாசன் மோசேயினையே

            யுத்தம் செய்ய பழக்குவித்தீரே

            உந்தன் தாசன் தாவீதினையே

            என்னை இன்று பழக்குமே

            உந்தன் ஆவியால் நிரப்புமே

 

3.         செத்த மனுஷனை எழும்பச் செய்த

            எலிசா எலும்பினுள் உம் அபிஷேகம்

            பவுலின் உருமால் கச்சைதனிலே

            சொஸ்தமாக்கும் உம் அபிஷேகம்

            என்னையும் நீர் நிரப்புமே

            உந்தன் ஆவியால் நடத்துமே

 

 

- John & Vasanthy

 

 

https://www.youtube.com/watch?v=MKZwi8u4hvs

Comments