அக்கினி அபிஷேகம் தந்து

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அக்கினி அபிஷேகம் தந்து

                        ஆவி பொழிந்திடும்

 

1.         சுட்டெரிக்கும் நல் அக்கினி

            சுத்திகரிக்க எம்மையும்

            குற்றங்குறைகள் மற்றுங் கறைகள்

            முற்றிலும் நீக்கிடுமே - எம்மில் - அக்கினி

 

2.         பற்றினதே வான் அக்கினி

            பக்தன் எலியா கூப்பிட

            வேண்டுதல் கேட்டு வானந் திறந்து

            வல்லமை ஊற்றிடுமே - இன்று - அக்கினி

 

3.         மோசேயுங் கண்ட அக்கினி

            முட்செடி மேலே பற்றிட

            அற்புத காட்சி தற்பரன் மாட்சி

            அண்டிட தந்திடுமே அதை - அக்கினி

 

4.         நாதாப் அபியூ அக்கினி

            நாடி அழிந்தால் நஷ்டமே

            அந்நிய தீயை பட்சிக்கும் தேவ

            ஆவியே வந்தாளும் - நல்ல - அக்கினி

 

5.         மேலறை வந்த அக்கினி

            சீஷரை அன்று சந்திக்க

            பற்பல பாஷை பேசி மகிழ்ந்த

            பக்தி வரம் தாரும் - தேவ - அக்கினி

 

6.         இரண்டு மடங்கு அக்கினி

            இந்த கடைசி நாட்களில்

            மாம்சமான யாவரின் மேலும்

            மாரியுடன் பொழியும் - பின் - அக்கினி

 

- சாராள் நவரோஜி

 

Comments