அகலா தென்னோடு வாழும் அருமை

ஞா.கீ:432

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

432. இராகம்: மோகனம்      ரூபக தாளம்

 

                             பல்லவி

 

          அகலா தென்னோடு வாழும்

          அருமைக் கிறிஸ்தரசே

 

                             அனுபல்லவி

 

            மிகப் பாவியாகு மென்னில்

            மிக தயை நிறைந்தோனே! - அகலா

 

                             சரணங்கள்

 

1.         என் திரு ரத்தத்தாலென்

            உள்ளத்தை சுத்தமாக்கி

            எந்த னகத்தில் வாழும்

            என்னருமை நாதனே - அகலா

 

2.         சுத்த இதயம் என்னில்

            துரிதமா யுண்டு பண்ணி

            நித்தம் நிலைக்கும் ஆவி

            நீசனெனக் கருளி - அகலா

 

 

- ஜோசப் ஜோயல்சிங்

 

 

Comments