அடியார் நெஞ்சைத் தயவாய்

ஞாபா:245

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

245. Veni Creator (2), Melcombe                                                     L.M.

 

                   "Come Holy Ghost, our souls"

 

1.       அடியார் நெஞ்சைத் தயவாய்

          அன்பால் நிரப்பி, உமக்கே

            பொருந்தும் அலங்காரமாய்

            படையும், தேவ ஆவியே.

 

2.         மெய்த் தேற்றரவளிக்கிற

            பர ஈவாய் இருக்கிறீர்;

            வானாபிஷேகமாகிய

            ஜீவாறும் நேசத் தீயும் நீர்.

 

3.         வெளிச்சம் தாரும் மனதில்

            சூடன்பை நெஞ்சிலே கொடும்,

            சரீர பலவீனத்தில்

            பலம் உண்டாக்கியருளும்.

 

4.         அடியார் எச்சரிக்கையாய்

            நீர் ஏவும்போல் நடக்கவே

            பிசாசின் சூதைத் தூரமாய்

            விலங்கும், மன வாசரே.

 

5.         பிதா சுதனையும் நன்றாய்

            அறிந்து அண்டிக்கொள்ளவே

            நீர் எங்கள் தேவ வாத்தியாய்

            இரும், இருவர் ஆவியே.

 

6.         த்ரியேக தெய்வமாகிய

            பிதா குமாரன் ஆவிக்கும்

            எப்போதென்றைக்கும் சகல

            புகழ்ச்சியும் உண்டாகவும்.

 

 

https://www.youtube.com/watch?v=soPUFyw8Fn0

Comments