அடைக்கலமே என் இயேசு தேவா

நிஜீ.கீதங்கள்:1531

To Download Txt Lyrics file

 

                   அடைக்கலமே என் இயேசு தேவா

                   அடிமை நானய்யா ... ஆ

 

1.         உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்

            உலகம் மாயை ஐயா ஆ...

            நித்திய வாழ்வை காணவே

            உம்மிடம் நாடி வந்தேனய்யா

 

2.         மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரம்

            என் பாவம் மன்னித்தீரே ஏ...ஏ

            பாவத்தில் மரித்து நீதிக்கு பிழைக்க

            கிருபை செய்தீரே

 

3.         வானமும் பூமியும் ஒழிந்து போனாலும்

            உம் வார்த்தை ஒழியாது

            இருபுறமும் கருக்குள்ள பட்டயம்

            நித்திய வழிகாட்டி

 

4.         தகப்பன் பிள்ளைக்கு இரங்குவது போல்

            என் மீது இரக்கம் செய்தீர்

            தாய் தன் பிள்ளையை மறந்து போனாலும்

            மறவாத தெய்வம் நீரே ...

Comments