அடைக்கலம் அடைக்கலமே இயேசுநாதா
ஏசுநாதா உன் அடைக்கலமே
சங்கராபரணம் - ஆதி தாளம்
பல்லவி
அடைக்கலம்
அடைக்கலமே, இயேசுநாதா, உன்
அடைக்கலம் அடைக்கலமே!
அனுபல்லவி
திடனற்றுப்
பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்-கு. - அடை
சரணங்கள்
1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
அன்புள்ள பிதா உனை
விட்டகன்று பிரிந்தேனே;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
தோஷமொடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! - அடை
2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப்
பாவமதில் மயங்கி உறங்கினேன்;
கெட்டவனே போவெனக் கிளத்தினும்[1] நியாயமே,
கிட்டிவந்தலறும்
ஏழைக் கெஞ்சுதல் கேளய்யனே! -
அடை
3. சிந்திய உதிரமதும்
ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சல மகற்றிடும்;
பந்தமிகும்
பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந்
தள்ளாமல் இரங்கிடு மையனே! - அடை
4. என்னிடத்தில் வருவோரை
எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதினில்
எனக்கும் பங்கில்லையோ?
அன்றுனது பக்கமதில் ஆயிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? - அடை
5. என்னிடத்தில் வருவோரை
எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதனில்
எனக்கும் பங்கில்லையோ
அன்றுனது பக்கமதில் ஆயிருந்த கள்ளனுக்கு
இன்று பரதீசி
லிருப்பா யென்றுரைத்தாயல்லவோ
- அடை
-
தேவசகாயம் உபாத்தியாயர்
Comments
Post a Comment